இந்தியாவின் ஆர்யன் வர்ஷ்னே 92வது கிராண்ட் மாஸ்டர் ஆனார் .
சர்வதேசசெஸ்தொடர் ஆர்மேனியாவில் ,இந்தியாசார்பில்சர்வதேசமாஸ்டர்அந்தஸ்து பெற்றஆர்யன்வர்ஷ்னே 21 வயது, உட்பட 10 பேர் பங்கேற்கின்றனர்.
ஆர்யன் , ஆர்மேனியானின் டைக்ரானை மோதிய 8வது சுற்று 'டிரா' ஆனது. இதையடுத்து, 8 சுற்றில் 6.5 புள்ளி பெற்ற ஆர்யன், கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெறுவதற்கான, மூன்றாவது அந்தஸ்தை எட்டினார். பரிமார்ஜன் நேகி, அபிஜீத் குப்தா, ஸ்ரீராம் ஜா, வைபவ் சூரி, சஹாஜ் குரோவர், ஆர்யன் சோப்ரா, பிரிது குப்தாவை தொடர்ந்து டில்லியின் 8வது கிராண்ட்மாஸ்டர் ஆனார் ஆர்யன் வர்ஷ்னே.
கடந்த 2024ல் முதலில் சர்வ தேச மாஸ்டர் ஆனார். அடுத்து கிரீஸ், வங்கதேச தொடரில் டில்லியை சேர்ந்த ஆர்யன், இரண்டாவுது அந்தஸ்தை எட்டினார்.
ஆர்மேனிய தொடரில் சிறப்பாக செயல்பட்ட, இந்தியாவின் ஆர்யன் வர்ஷ்னே 92வது கிராண்ட்மாஸ்டர் ஆனார்..
0
Leave a Reply