25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ஆசிய தடகளம்: இந்தியாவுக்கு முதல் நாளே 6 பதக்கங்கள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆசிய தடகளம்: இந்தியாவுக்கு முதல் நாளே 6 பதக்கங்கள்.

சீனாவில் நடைபெற்று வரும் 23 வயதுக்குட்பட்டோருக்கான முதல் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா முதல் நாளிலேயே சிறப்பான தொடக்கத்தை பதிவு செய்தது.

4x400 மீட்டர் கலப்பு ரிலே ஓட்டத்தில் ஆசிக் பிரதான் சந்திரமோல், சேது மிஷ்ரா, ஷ்ரவானி உள்ளிட்ட இந்திய அணி 3:18.64 நிமிடங்களில் பந்தயத்தை முடித்து தங்கப் பதக்கம் வென்றது.

ஆண்கள் குண்டு எறிதலில் பார்த் பிரீத் சிங் வெண்கலமும், பெண்கள் 3000 மீ. ஸ்டீபிள்சேஸ் போட்டியில் பிராச்சி தேவ்கர் வெண்கலமும் கைப்பற்றினர்.

ஆண்கள் 5000 மீ. ஓட்டத்தில் ஷிவாஜி பரசுராம் வெள்ளிப் பதக்கம் வென்றார். அதே பிரிவில் வினோத் சிங் வெண்கலப் பதக்கம் பெற்றார்.

முதல் நாள் முடிவில் இந்தியா 1 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களை வென்று அசத்தியது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News