ஆசிய விளையாட்டில் 3 பதக்கம் வென்ற தடகள வீராங்கனை வித்யா மற்றும் பயிற்சியாளருக்கு கார் பரிசு!
ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், இந்திய தடகள வீராங்கனையான தமிழகத்தைச் சேர்ந்த வித்யா ராம்ராஜ் 3 பதக்கங்களை வென்று அசத்தினார். இவர் பெண்கள் அணிக்கான தொடர் ஓட்டத்தில் தங்கமும், கலப்பு தொடர் ஓட்டத்தில் வெள்ளியும், 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வெண்கலப் பதக்கமும் கைப்பற்றித் தடகள ராணியாக ஜொலித்தார்.
சாதனை படைத்த வித்யாவுக்கும், அவரது பயிற்சியாளர் நேஹ்பால் சிங்குக்கும் 'வேலம்மாள் நெக்ஸஸ்' குழுமம் சார்பில் பிரமாண்டமான பாராட்டு விழா நடத்தப்பட்டது. சென்னை ஆவடியில் உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் நடந்த இந்த விழாவில், வீராங்கனை வித்யா, அவரது தாயார் மற்றும் பயிற்சியாளர் நேஹ்பால் சிங் ஆகியோரை மாணவர்கள் அலங்கரிக்கப்பட்ட சாரட் வண்டியில் ஊர்வலமாக அழைத்துச் சென்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர், வித்யாவைத் தலைசிறந்த வீராங்கனையாக உருவாக்கியதில் முக்கிய பங்காற்றிய அவரது பயிற்சியாளருக்கும், வீராங்கனை வித்யாவுக்கும் தலா ஒரு புதிய கார் பரிசாக வழங்கப்பட்டது. இவற்றை വേலம்மாள் நெக்ஸஸ் நிறுவனத்தின் தாளாளர் எம்.வி.எம். வேல்மோகன் வழங்கிப் பாராட்டினார்.
0
Leave a Reply