25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ஆசிய விளையாட்டு: காலிறுதியில் ஜப்பானை எதிர்கொள்ளும் இந்திய பெண்கள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆசிய விளையாட்டு: காலிறுதியில் ஜப்பானை எதிர்கொள்ளும் இந்திய பெண்கள்.

ஜப்பானில் செப்டம்பர் 29-ம் தேதி தொடங்க உள்ள 20வது ஆசிய விளையாட்டு போட்டிக்கான கிரிக்கெட் அட்டவணை வெளியாகியுள்ளது. இதில் இந்திய அணிகள் நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் களமிறங்குகின்றன.

பெண்கள் கிரிக்கெட் பிரிவில் இந்தியா, வங்கதேசம், சீனா, இலங்கை, மலேசியா, பாகிஸ்தான், தாய்லாந்து, ஜப்பான் ஆகிய 8 அணிகளும் நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

செப்டம்பர் 18-ம் தேதி நடைபெறும் காலிறுதிப் போட்டியில் இந்திய பெண்கள் அணி, ஜப்பானை எதிர்கொள்கிறது.

ஆண்கள் பிரிவில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய 4 அணிகள் நேரடியாக காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. செப்டம்பர் 28-ம் தேதி நடைபெறும் காலிறுதியில் இந்திய அணி, முதல் சுற்றின் ‘ஏ’ பிரிவில் 2வது இடம் பிடிக்கும் அணியை சந்திக்கிறது. அந்தப் பிரிவில் ஆப்கானிஸ்தான், ஜப்பான், நேபாளம் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

பெண்கள் கிரிக்கெட் இறுதிப்போட்டி செப்டம்பர் 22-ம் தேதியும், ஆண்கள் இறுதிப்போட்டி அக்டோபர் 3-ம் தேதியும் நடைபெற உள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *