ஆசிய விளையாட்டு: கிரிக்கெட் அரையிறுதிக்கு இந்திய பெண்கள் அணி முன்னேற்றம்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்கள் கிரிக்கெட்டில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. காலிறுதிப் போட்டியில் ஜப்பான் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், பெண்கள் கிரிக்கெட் (டி20) காலிறுதியில் நடப்பு சாம்பியனான இந்தியா, ஜப்பான் அணிகள் மோதின.
‘டாஸ்’ வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறிய ஜப்பான் அணி 19.5 ஓவர்களில் 57 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
எளிய இலக்கைத் துரத்திய இந்திய அணி 5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 59 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய பெண்கள் அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
0
Leave a Reply