கொள்ளு சட்னி.
தேவையான பொருட்கள்:
கொள்ளு - 1/2 கப்,
சின்ன வெங்காயம் – 6,
பூண்டு - 4 பல்,
காய்ந்த மிளகாய் - 3 அல்லது 4,
துருவிய தேங்காய் - 2 ஸ்பூன்,
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு,
சீரகம் - 1/2 டீஸ்பூன்,
எண்ணெய் - தேவையான அளவு,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
கடாயில் எண்ணெய் இல்லாமல் கொள்ளு சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்து தனியாக எடுத்துக்கொள்ளவும்.
அதே கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், சின்ன வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய் மற்றும் சீரகம் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் புளி மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து லேசாக வதக்கி அடுப்பை அணைக்கவும்.
வறுத்து வைத்துள்ள கொள்ளு மற்றும் மற்ற பொருட்கள் நன்கு ஆறிய பின், மிக்ஸியில் சேர்த்து தேவையான உப்பு மற்றும் தண்ணீர் விட்டு அரைத்து எடுக்கவும்.
இப்போது சுவையான கொள்ளு சட்னி தயார். இட்லி, தோசை அல்லது இதனை துவையல் போல அரைத்து சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.
0
Leave a Reply