25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


பறவைகள் கணக்கெடுப்பு பணியில் ஆர்வம் உள்ள ஆர்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொண்டு நிறுவனத்தினர் தொடர்பு கொள்ளலாம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பறவைகள் கணக்கெடுப்பு பணியில் ஆர்வம் உள்ள ஆர்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொண்டு நிறுவனத்தினர் தொடர்பு கொள்ளலாம்.

விருதுநகர் மாவட்டத்தில் டிசம்பர் 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் இராஜபாளையம் தேவதானம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்ராப், கோவிலார் அணை, பெரியார் அணை, கூமாபட்டி, விராகசமுத்திரம், விருதுநகர் குல்லூர் சந்தை, அருப்புக்கோட்டை, உலக்குடி, இருக்கண்குடி, வெம்பக்கோட்டை அணை, சங்கரபாண்டியபுரம், கோட்டையூர், தாயில்பட்டி, சங்கரபாணடியபுரம், தாயில்பட்டி கோட்டையூர் உள்ளிட்ட 21 இடங்களில் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதன் வாயிலாக விருதுநகர் மாவட்டத்தில் காணப்படும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பறவைகள், விருதுநகர் மாவட்டத்திற்கு இனப்பெருக்கத்திற்காக வெளிநாட்டு பறவைகள் வந்து உள்ளனாவா என்று அறியலாம்.

 பறவைகள் கணக்கெடுப்பில் ஆர்வம் உள்ள ஆர்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொண்டு நிறுவனத்தினர் துணை இயக்குநர் அலுவலக தொலைபேசி எண். 04563-260565 மற்றும் சிவகாசி வனச்சரக அலுவலர் திரு.பூவேந்தன் 84890-54853 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தங்கள் கணக்கெடுப்பில் கலந்துக் கொள்வதற்கு பதிவு செய்துக் கொள்ளலாம். மேலும் பறவைகள் கணக்கெடுப்பில் பங்கு பெறுபவர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்படும் என துணை இயக்குநர்(திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்) மரு.இரா.முருகன்,இ.வ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News