ரூ.36.40 கோடி மதிப்பில்,இருவழி சாலைகளை நான்கு வழித்தடமாக அகலப்படுத்தி மேம்படுத்துவதற்கான பணிகளுக்கு அமைச்சர் திரு.தங்கம்தென்னரசு அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை க.விலக்கில்(30.03.2025) நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்புத்துறை சார்பில் ரூ.36.40 கோடி மதிப்பில் அருப்புக்கோட்டை பெருநாழி சாயல்குடி கடுகுசந்தை மாரியூர் வாலிநோக்கம் இருவழி சாலைகளை நான்கு வழித்தடமாக அகலப்படுத்தி மேம்படுத்துவதற்கான பணிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வீ.ப.ஜெயசீலன்I.A.S.அவர்கள் தலைமையில் நிதி,சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம்தென்னரசு அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.அமைச்சர் திரு.தங்கம்தென்னரசு,தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சாலை வசதிகளை மேம்படுத்துவதற்காவும்,விரிவுபடுத்துவதற்காவும், சாலை பாதுகாப்பினை உறுதிபடுத்துவதற்கும் பல்வேறு திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார்கள்.
இந்த சாலையானது முக்கிய நகரங்களான அருப்புக்கோட்டை. திருச்சுழி, கமுதி. பெருநாழி. சாயல்குடி, கடுகுசந்தை, மாரியூர், வாலிநோக்கம் ஆகியபகுதிகளை இணைக்கிறது. மேலும் முக்கிய சுற்றுலாத்தலமான வாலிநோக்கம் கடற்கரை இச்சாலையின் எல்கையில் அமைந்துள்ளது. மேலும் இங்கு, தொழிற்சாலைகள், குவாரிகள், கல்லூரி மற்றும் பள்ளி வளாகங்கள் அதிகம் உள்ளது. விவசாயிகள் பெருமளவில் வணிகப் பொருட்களை கொண்டு செல்ல இச்சாலையை பயன்படுத்துகின்றனர். இதன் மொத்த நீளம் 79.260 கி.மீ. அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் கமுதி விலக்கு முதல் செட்டிகுளம் விலக்கு வரைமுதற்கட்டமாக இருவழித்தடத்திலிருந்து நான்குவழித்தடமாக மாற்றும் வகையில், முதலமைச்சரின் சாலைமேம்பாட்டுத் திட்டம் மூலம் ரூ.36.40 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.
இச்சாலையானது 6.00 கி.மீ. நீளத்துடன், 7 சிறுபேழை பாலங்கள், 100 மீ அளவிலான தடுப்புச்சுவர்கள், குறுக்கு வடிகால் பணிகள், தடுப்புச்சுவர் கட்டுதல்,மையத்தடுப்பான் கட்டுதல், சாலை சந்திப்புகளை மேம்பாடு செய்தல் உள்ளிட்டபணிகளுடன்நான்குவழித்தடமாகஅகலப்படுத்தப்படவுள்ளது..திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்கு மட்டும் இதுவரை ஏறத்தாழ ரூ.121.11 கோடி மதிப்பில்103 கி.மீ தூரம் சாலைகள் போடுவதற்கும், ரூ.16 கோடி மதிப்பில் 21 பாலங்கள் அமைக்கும் பணிகளும் என மொத்தம் ரூ.137 கோடி மதிப்பிலான மிகப்பெரிய பணிகள் நெடுஞ்சாலைத் துறையின் மூலமாக நமது பகுதிகளில் நிறைவேற்றிஇருக்கின்றோம்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நடைபெற்று வரும் நிதிநிலை அறிக்கையில் ஒவ்வொரு நாளும் நல்ல அறிவிப்புகளை வெளியிட்டு கொண்டு வருகிறார்கள். பெண்களுக்கான அறிவிப்பாக, நம்முடைய மாணவர்களுக்கான அறிவிப்பாக இந்த நிதிநிலை அறிக்கை எல்லா தரப்பு மக்களுக்கும் பயன்பெறும் வகையில்,இந்த முறை நிதிநிலை அறிக்கையை தந்து இருக்கிறார்கள். அவருடைய கரங்களை வலுப்படுத்த என்றைக்கும் நாம் உறுதுணையாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், கண்காணிப்பு பொறியாளர் திருமதி.ஜெயராணி, நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் (விருதுநகர்) திருமதி பாக்கியலெட்சுமி, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply