25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


செந்திக்குமார நாடார் அறிவியல் மற்றும் கலை கல்லூரியில், கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட வாக்காளார் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடைபெற்றன.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

செந்திக்குமார நாடார் அறிவியல் மற்றும் கலை கல்லூரியில், கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட வாக்காளார் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடைபெற்றன.

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் - 2026-னை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையிலும், "என் வாக்கு விற்பனைக்கு அல்ல" என்பதை வலியுறுத்தி நேர்மையான தேர்தலை எதிர்கொள்ளவும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு (SVEEP) நிகழ்ச்சிகள் நடைபெற்று  வருகின்றன.அதன்படி, கல்லூரியில் பயிலும் இளம் வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட கோலப் போட்டிகளில் மாணவிகள் கலந்து கொண்டு, பல்வேறு   வாக்காளர் விழிப்புணர்வு கோலங்களை வரைந்தனர்.

 இளம் வாக்காளர்களின் எழுச்சிமிகு விழிப்புணர்வு

இதன் ஒரு பகுதியாக, இன்று (10.04.2026) செந்திக்குமார நாடார் அறிவியல் மற்றும் கலை கல்லூரியில், 100 க்கும் மேற்பட்ட இளம் வாக்காளர்கள் 100% Vote என்ற தேர்தல் வாசகம் வடிவில் நின்று வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தினர்.

 உறுதிமொழி ஏற்பு:

          "எனது வாக்கு விற்பனைக்கு அல்ல" மற்றும் "ஜனநாயகக் கடமையை தவறாமல் ஆற்றுவேன்" என்ற உயரிய நோக்கை வலியுறுத்தி, மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் அனைவரும் இணைந்து நேர்மையாகவும், தவறாமலும் வாக்களிப்போம் என விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.மேலும், மாணவிகள் கைகளில் மெஹந்தி மூலம் விழிப்புணர்வு படங்கள் மற்றும் வாசகங்களை எழுதியும், முகத்தில்  வர்ணம் பூசியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

 விழிப்புணர்வு செயல்பாடுகள்:

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடு மற்றும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாதிரி வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் மாணவர்களுக்கு நேரடி விளக்கம் அளிக்கப்பட்டது.நிகழ்ச்சியின் இறுதியாக வாக்காளர் விழிப்புணர்வு குறித்து கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

 கையெழுத்து இயக்கம்

தொடர்ந்து, எனது வாக்கு எனது உரிமை என்ற தலைப்பில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்டு அனைவரும் கையெழுத்திட்டனர்.இந்நிகழ்வில், கல்லூரி பேராசிரியர்கள்,மாணவ மாணவிகள் உட்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News