25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


ஆவணி பவுர்ணமி நாளில்செப்டம்பர் 7,2025 ,சந்திர கிரகணம் இந்தியாவில் இருந்து முழுமையாகத் தெரியும்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆவணி பவுர்ணமி நாளில்செப்டம்பர் 7,2025 ,சந்திர கிரகணம் இந்தியாவில் இருந்து முழுமையாகத் தெரியும்.

இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணம் செப்டம்பர் 7,2025 அன்று நிகழ உள்ளது. இதன் கால அளவு 3 மணி நேரம் 30 நிமிடங்கள் ஆகும். இதன் சிறப்பு என்னவென்றால், இந்த சந்திர கிரகணம் இந்தியாவில் இருந்து முழுமையாகத் தெரியும். 

செப்டம்பர்07ம் தேதியன்று இரவு09.56 மணிக்குதுவங்கி,நள்ளிரவு01.26 வரை சந்திர கிரகணம் நிகழ உள்ளது. முழுசந்திரகிரகணம் இரவு 10.59 மணிக்குதுவங்குவதாக சொல்லப்படுகிறது. பொதுவாகவே சந்திரகிரகணம் என்பது பவுர்ணமி நாளில்தான்நிகழும். இந்தமுறைஆவணிபவுர்ணமி நாளில் சந்திர கிரகணம் நிகழ உள்ளது.

சந்திர கிரகணத்தின் போது என்ன செய்ய கூடாது?

  • சந்திர கிரகணம் ஏற்படும்போது ஒரு சில விஷயங்களில் நாம் சிறப்பாக உடன் செலுத்த வேண்டும்.
  • ஏற்படும் போது எல்லாம் அதன் சூதகாலம் அதற்கு 9 மணி நேரத்திற்கு முன் தொடங்கும். சூத காலத்தில் நாம் எந்த ஒரு சுப காரியங்களையும் செய்யக்கூடாது.
  • மேலும் சந்திர கிரகணத்தின் போது உணவு சமைப்பதையும், சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.
  • கிரகண காலத்தில் தெய்வ சிலை தொடக்கூடாது. கோயிலுக்குள் நுழையக்கூடாது.
  • கிரகண நேரத்தின் போது கத்தி, ஊசி போன்ற கூர்மையான பொருட்களை பயன்படுத்தக் கூடாது.
  • குறிப்பாக சந்திர கிரகணத்தின் போது கர்ப்பிணிப் பெண்கள் வெளியே செல்லக்கூடாது.

சந்திர கிரகண நேரத்தில் செய்ய வேண்டியவை:

  • சந்திர கிரகணத்தின் போது நீங்கள் கோபத்தை கட்டுப்படுத்தி பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
  • சந்திர கிரகண நேரத்தில், கடவுள் வழிபாடு செய்வதை தவிர்த்தாலும், நாம் தொடர்ச்சியாக மந்திரங்களையும், கடவுள் பெயரை முட்டி இருக்கலாம். புராணங்களைப் படிக்கலாம்.
  • மந்திரங்கள் தெரியவிட்டாலும் எளிமையான, ஸ்ரீ ராம ஜெயம், ஓம் நமசிவாயா போன்ற எளிமையான மந்திரங்களை நாம் உச்சரித்துக் கொண்டே இருக்கலாம்.
  • இந்த சந்திர கிரகணம் முடிந்தவுடன், வெள்ளை நிற பொருட்களை தானம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் அசுப பலன்கள் குறையும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News