சர்வதேச நெகிழி பை இல்லா தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
விருதுநகர் ஷத்திரிய வித்யாசாலா நூற்றாண்டு பள்ளியில் மாவட்டம் நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மூலம் சர்வதேச நெகிழி பை இல்லா தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன். I A S அவர்கள் (03.07.2024) துவக்கி வைத்தார்.சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லாத தினம் என்பது ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 3ம் தேதி சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லாத தினம் கடைபிடிக்கப்படுகிறது. இது ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் பாதிப்புகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், நிலையான மாற்றுகளைப் பயன்படுத்த மக்களை ஊக்குவிப்பதும் இந்த தினத்தின் முக்கிய நோக்கமாகும்.
அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில், இன்று நெகிழி பை பயன்பாட்டை ஒழித்து, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத துணிப்பையின் உபயோகத்தை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் பள்ளி மாணவ, மாணவியர்களின் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.இப்பேரணியில் 300 -க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு மாசினை குறைப்போம், சுற்றுச்சூழலை காப்போம் துணிப்பை என்பது எளிதானது, தூர எறிந்தால் உரமாகுது போன்ற விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி, முக்கிய வீதிகள் வழியாக, பாண்டியன் நகர் தபால் நிலையம் வரை சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இப்பேரணியில், மீண்டும் மஞ்சப்பை திட்டம் மூலம், நெகிழி பயன்பாட்டை தவிர்த்து, அதற்கு மாற்றாக துணிப்பைகளை உபயோகிக்கும் பழக்கத்தை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில், மஞ்சப்பைகளை மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் (தமிழ்நாடு மாசுக்கட்டுபாடு வாரியம்) திரு.ராமராஜ், பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply