பீட்ரூட் முறுக்கு.
தேவையான பொருட்கள்:
பீட்ரூட் - 2,
கடலை மாவு–1 கப்,
அரிசி மாவு- கால் கப்,
ஓமம்- 1 தேக்கரண்டி,
மிளகு துாள்,எண்ணெய், உப்பு- தேவையான அளவு.
செய்முறை:
பீட்ரூட்டை வேக வைத்து, துண்டு துண்டாக நறுக்கி, மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுக்கவும்.
அதனுடன் மிளகு, ஓமம், அரிசி மாவு மற்றும் கடலை மாவு சேர்த்து, முறுக்கு மாவு பதத்திற்கு பிசையவும்.
வாணலியில் எண்ணெயை காய வைத்து, மாவை அச்சில் போட்டு பிழிந்து, பொரித்து எடுக்கவும்.
ஆரோக்கியமான, மொறுமொறுப்பான பீட்ரூட் முறுக்கு தயார். நொறுக்கு தீனியாக குழந்தைகள்மட்டுமின்றி, பெரியவர்களும் சுவைத்து சாப்பிடுவர்.
0
Leave a Reply