25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


உடலின் வெப்பம் சமநிலைப்படுத்தும், எண்ணெய் குளியல்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உடலின் வெப்பம் சமநிலைப்படுத்தும், எண்ணெய் குளியல்

எண்ணெய் குளியல் மூலம் உடலின் வெப்பம் சமநிலைப்படுகிறது. அதீத உடல் சூடு குறைய உதவுகிறது. உடலில் வெப்பம் அதிகரிக்கும்போது மனதையும் அது பாதிக்கிறது, மன அழுத்தம் ஏற்படுகிறது. இதுபோன்ற நிலையில் மன அழுத்தத்தை குறைத்து, நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி, ஆழ்ந்த தூக்கம் ஏற்பட உதவுகிறது. உடலில் சூட்டினால் ஏற்படும் நோய்களை தவிர்க்க ஏற்படுத்தப்பட்ட பாரம்பரிய மருத்துவ முறையாக எண்ணெய் குளியல் உள்ளது.

தோலில் படிந்துள்ள கழிவுகள் ,தோலில் எண்ணெய் தேய்த்து விடுவதால் நீங்கி, ரத்த ஓட்டம் மேம்படுகிறது. உடலில் ரத்தம் நன்கு பாயும்போது உடல் புத்துணர்ச்சி அடைகிறது. மனிதன் தொடர்ந்து நடக்கும்போது கால் மூட்டுகளானது உடல் எடையுடன், அதிர்வுகளையும் தாங்கி இயங்குகின்றன. பல்வேறு காரணங்களால் மூட்டு வலி. வாதம் மற்றும் உடல் சோர்வு ஏற்படுகிறது. இதனை குறைக்க எண் ணெய் குளியல் உதவுகிறது. வாரம் 2 முறை எண்ணெய் தேய்த்து குளித்து வந்தால் தோல் மென்மையாகி, பளபளப்பாகவும் மாறுகிறது. தோல் நோய்களும் நீங்கி விடுகின்றன. தலைக்கு எண்ணெய் தடவுவதால் முடி வறட்சி, உதிர்தல், பொடுகு உள்பட பல்வேறு பிரச்சினைகள் நீங்கிமுடிகருமையாக வளரும்.. நல்லெண்ணெய் தேய்த்து குளித்து வந்தால் ரத்த ஓட்டம் சீராக நடைபெறும். தேங்காய் எண்ணெய் உடலில் ஏற்படும் அதிகப்படியான வெப்பத்தை தணித்து உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும். சிலர் விளக்கெண்ணெயை கூட குளியலுக்கு பயன்படுத்துகின்றனர். சித்த மருத்துவம் செக்கில் ஆட்டிய நல்லெண்ணெயானது எண்ணெய் குளியலுக்கு உகந்தது என்கிறது

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News