கனடா ஓபன் டென்னிஸ்: ஸ்வியாடெக், ஸ்விடோலினா அரையிறுதிக்கு முன்னேற்றம்!
கனடாவின் டொராண்டோ நகரில் நடைபெற்று வரும் கனடா ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் காலிறுதியில், உலக தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், ரஷியாவின் டயானா ஸ்னைடெரை 6-2, 6-1 என்ற நேர் செட்களில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதி ஆட்டத்தில், 9-வது இடத்தில் உள்ள உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா, முதல் செட்டை இழந்தபோதும் சிறப்பாக மீண்டு வந்து ரஷியாவின் எகடெரினா அலெக்சாண்ட்ரோவாவை 3-6, 6-0, 6-3 என்ற செட் கணக்கில் வென்றார்.
இதையடுத்து அரையிறுதியில் ஸ்விடோலினா, ஸ்வியாடெக்கை எதிர்கொள்கிறார்.
0
Leave a Reply