வரகு அரிசி வெண்பொங்கல்.
தேவையான பொருட்கள் :
வரகு அரிசி - 1 கப்
பாசிப்பருப்பு - 1/2 கப்
தண்ணீர் – 3 1/2 முதல் 4 கப்
நெய் - 3 ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
இஞ்சி (பொடியாக நறுக்கியது) - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
முந்திரி - 10
கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத்தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
கடாயில் பாசிப்பருப்பை லேசாக வாசனை வரும் வரை வறுத்து எடுக்கவும்.
வரகு அரிசியும் வறுத்த பருப்பையும் ஒன்றாக இரண்டு முறை நன்றாகக் கழுவவும்.
குக்கரில் கழுவிய அரிசி-பருப்புடன் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மிதமான தீயில் 4 அல்லது 5
விசில் விட்டு எடுக்கவும்.
மற்றொரு கடாயில் நெய் ஊற்றி சூடானதும், மிளகு, சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய், முந்திரி,
கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
தாளித்த பொருட்களை வெந்த வரகு பொங்கலில் கொட்டி நன்றாகக் கிளறி பரிமாறவும்.
சுவையான மற்றும் ஆரோக்கியமான வரகு அரிசி வெண்பொங்கல் தயார்.
0
Leave a Reply