வரகரிசி இனிப்பு பணியாரம்!
தேவையான பொருட்கள்:
வரகரிசி - 1 கப்
உளுந்தம் பருப்பு,வெல்லம் - தலா கால் கப்
தேங்காய் துருவல் - 1 கப்
வாழைப்பழம் - 1
ஏலக்காய், தண்ணீர்,எண்ணெய், உப்பு -தேவையான அளவு.
செய்முறை:
வரகரிசி, உளுந்தம் பருப்பை நன்றாக கழுவி, 3 மணி நேரம் ஊற வைக்கவும். தண்ணீரில்
வெல்லத்தை கரைத்து, வடிகட்டவும். ஊறிய வரகரிசி, உளுந்தம் பருப்பு, வாழைப்பழம்,
ஏலக்காயுடன் வெல்லக்கரைசலை சேர்த்து, தோசை பதத்திற்கு அரைக்கவும்.
பின், அந்த மாவில் உப்பு, தேங்காய் துருவலை சேர்த்து கலக்கவும். பணியார கல் சூடானதும்,
எண்ணெய் தடவி, மாவை ஊற்றி, இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.
சத்து மிக்க, 'வரகரிசி இனிப்பு பணியாரம்' தயார். அனைத்து வயதினரும் விரும்பி உண்பர்.
0
Leave a Reply