25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


காலிஃப்ளவர் புலாவ்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

காலிஃப்ளவர் புலாவ்.

தேவையான பொருட்கள்

2 கப் காலிஃப்ளவர்,2 கேரட், 4 பீன்ஸ்,1வெங்காயம்,1தக்காளி,4 பச்சை மிளகாய்,1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது,2 கப் பாஸ்மதி ரைஸ்,

2 பட்டை,4லவங்கம்,1 அண்ணாச்சி பூ,2 ஏலக்காய்,1ஸ்பூன் சோம்பு,

2பிரிஞ்சி இலை,1 ஸ்பூன்கரம் மசாலாத்தூள்,2 ஸ்பூன் நெய்,

தேவைக்கு ஆயில்,தேவைக்கு புதினா கருவேப்பிலை,தேவைக்கு உப்பு

தேவைக்கு தண்ணீர்.

செய்முறை -

முதலில் தேவையான காய்கறிகள் மற்றும் மசால் பொருட்களை எடுத்து வைக்க வேண்டும்.பின்பு காலிஃப்ளவரை 2 நிமிடம் சுடுதண்ணீரில் போட்டு எடுக்க வேண்டும்.காய்கறிகளை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

முதலில் அடுப்பில் குக்கரை வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்துமசாலா பொருட்களில் தாளிக்க வேண்டும்.பின்பு வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.வதங்கிய பின் இஞ்சி பூண்டு விழுதை சேர்க்கவும்.

பின்பு காய்கறிகளை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்க வேண்டும்.கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.புதினா கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.பாஸ்மதி அரிசியை 10 நிமிடம் தண்ணீரில் ஊற விட வேண்டும்.

ஊறிய பாஸ்மதி அரிசிஒரு ஸ்பூன் நெய் சேர்த்து கடாயில் லேசாக வதக்கவும்.பின்புநான்கு கப் தண்ணீர் சேர்த்து சிறிது உப்பு சேர்த்து காய்கறி கலவை நன்கு கொதி வந்தவுடன்வதக்கிய பாஸ்மதி அரிசி சேர்க்க வேண்டும்.

குக்கரை மூடி 2 விசில் வந்தவுடன் 2 நிமிடம் சிம்மில் வைத்து இறக்க வேண்டும்.சுவையான சத்தான காலிஃப்ளவர் புலாவ் ரெடி.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News