குகை ஓவியங்கள்.
எழுத்து, சொற்கள் இல்லாத காலகட்டத்தில் வாழ்ந்த ஆதிகால மக்கள், தங்கள் வாழ்க்கையை பதிவு செய்ய எந்த வழியும் இல்லாததால், அவர்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்பதை அறிவதற்கு இன் றைய ஆராய்ச்சியாளர்களுக்கு கடினமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில், பல்வேறு குகைகளில் கண்டறியப்பட்ட கற்கால கருவிகள், வாழ்விடங்கள். விலங் குகள் மற்றும் மனிதர்களின் எலும்புகள், குகைகளில் வரையப்பட்ட வரைபடங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களை ஒன்றாக இணைத்ததன் மூலம் எப்படி வாழ்ந்தார்கள் என்பது பற்றி ஓரளவு அறியமுடிகிறது.ஆதிமனிதர்கள் குகை பாறைகளை தங்கள் ஓவிய தளமாக பயன்படுத்திக் கொண்டனர். இந்தியாவில், பல்வேறு இடங்களில் குகை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.
அதில், தமிழ்நாட்டில் இருக்கும் சித்தன்னவாசல் ஓவியங்கள் குறிப்பிடத்தக்கவை. பறவைகள், விலங்குகள், மீன்கள் மற்றும் இயற்கையை மதிக்கும் மக்கள் குறித்த ஓவியங்களை அங்கு காணலாம்.தமிழ்நாட்டின் வேலூர் பகுதியில் அமைந்துள்ள ஆர்மமலை குகை ஓவியங்கள் 8-ம் நூற்றாண்டை சேர்ந்தவை. இந்த பாறை ஓவியங்கள், சமண துறவிகளால் உருவாக்கப்பட்டவை.
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏலகிரி மலையில் தற்போது, ஒரு குகையில் இரும்புக்கால பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டன.
விலங்குகளின் மீது மனிதன் ஏறி ஆயுதங்களுடன் சண்டையிடும் காட்சிகள் வரையப்பட்டு இருக்கின்றன. ஒருவர் சிறுத்தையை ஆயுதத்தால் தாக்குவதையும், மக்கள் நடனமாடுவது, போர் வெற்றிகளை கொண்டாடுவது, ஒருவரை பல்லக்கில் சுமந்து செல்வது போன்றும் வரையப்பட்டு உள்ளது.
0
Leave a Reply