கமலின்பிறந்தநாள் அறிவிப்பாக வெளியான 'சண்டியர்' படத் தலைப்பு.
எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'சண்டியர்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. நடிகர் கமலின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த அதிகாரப்பூர்வ தலைப்பு அறிவிப்பு வெளியானது.
முன்னதாக 2004-ல் கமல் இயக்கி, நடித்த 'விருமாண்டி' திரைப்படத்திற்கு முதலில் 'சண்டியர்' என்ற தலைப்பே வைக்கப்பட்டிருந்தது. ஆனால், அப்போது எழுந்த பல்வேறு எதிர்ப்புகள் காரணமாக அத்தலைப்பு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
0
Leave a Reply