டோட்டல் செஸ் சாம்பியன்ஷிப்: முதல் நாளில் இந்திய வீரர்கள் அபாரம்.
ஹங்கேரியில் 'டோட்டல் செஸ் உலக சாம்பியன்ஷிப் டூர் பைலட்' தொடர் நேற்று தொடங்கியது. வழக்கமான தொடர்களைப் போலல்லாமல், இதில் கிளாசிக் (தலா 45 நிமிடம்), ரேபிட் (தலா 15 நிமிடம்), பிளிட்ஸ் (தலா 3 நிமிடம்) என மூன்று வடிவங்களிலும் போட்டிகள் நடத்தப்பட்டு, ஒட்டுமொத்த செயல்பாட்டின் அடிப்படையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார். இத்தொடரின் மொத்த பரிசுத் தொகை ரூ.6.1 கோடியாகும்.
ஐந்து முறை உலக சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் மற்றும் இந்தியாவின் பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி, வைஷாலி உட்பட 24 வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்றுள்ளனர். முதல் நாளான நேற்று 'பிளிட்ஸ்' சுற்று முடிவில் இந்தியாவின் அர்ஜுன் மற்றும் வைஷாலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்தச் சுற்றின் முடிவின்படி 24 பேரும் தலா 6 பேர் கொண்ட 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்கள் பிரிவில் உள்ள மற்றவர்களுடன் தலா இரண்டு முறை மோதவுள்ளனர்.
0
Leave a Reply