ஜப்பான் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இரண்டாவது சுற்றில் லக்சயா சென், ஸ்ரீகாந்த்.
ஜப்பானில் 'சூப்பர் 500' அந்தஸ்து பெற்ற ஜப்பான் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், இந்திய வீரர் லக்சயா சென், சீன தைபேயின் சியு ஜென்னை எதிர்கொண்டார். 49 நிமிடங்கள் நீடித்த இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய லக்சயா சென் 21-19, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், டென்மார்க்கின் ராஸ்மஸ் ஜெம்கேவுடன் மோதினார். ஒரு மணி நேரம் 8 நிமிடங்கள் வரை மிகவும் பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில், ஸ்ரீகாந்த் 18–21, 21-16, 24-22 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்றார்.
0
Leave a Reply