தேங்காய் இனிப்பு சூப்
உடல் ஆரோக்கியத்துடன் தேவையான குளுக்கோஸ், சோடியம் பொட்டாசியம், அயோடின் போன்ற தாது உப்புக்கள் தேங்காயில் தாராளமாக உள்ளன. இது வாயுவையும், பித்தத்தையும் போக்கி உடலுக்கு வலிமையை சேர்க்கிறது.தேங்காயுடன் காரப்பொருள்கள் சேர்த்து சூப் செய்தால் இதன் சத்துக்கள் குறைவுபடும். ஆதலால், இனிப்புச் சுவையுடன் கூடிய சூப்பாகத் தயாரித்துக் கொள்வதே நல்லது.
தேவையான பொருட்கள்- முற்றிய தேங்காய் - 2,முந்திரிப் பருப்பு 10,எலக்காய் 3,பச்சை அரிசி - 50,கிஸ்மிஸ் பழம் - 10,
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை-நன்றாக முற்றிய தேங்காய் இரண்டை உடைத்து.துருவி150 மி.லி வெந்நீர் விட்டு சிறிது நேரம் கழித்து நன்றாகக் கசக்கிப் பிழிந்து, கெட்டியாகப் பால் எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு தேங்காய்த் துருவலை அம்மியில் வைத்து அரைத்து100 மி.லி நீர்விட்டு, நன்றாகக் கசக்கிப் பிழிந்து பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.மீண்டும் ஒருமுறை200 மி.லி நீர்விட்டு அந்தப் பாலை அடுப்பில் வைத்து பச்சை அரிசி50 நெய்யாக உடைத்து பாலில் போட்டு கொதிக்க விட வேண்டும்.
அரிசி வெந்து பதமானதும், இரண்டாவது பாலைவிட்டுக் கொதிக்கவிட வேண்டும் பாயாசம் போல ஆனதும்10 முந்திரிப் பருப்பையும்10 கிஸ்மிஸ் பழத்தையும் வறுத்துப் போட வேண்டும்.3 ஏலக்காய்களை தோல் போக்கி, விதைகளை மட்டும் பொடி செய்து போட வேண்டும். இனிப்பு சூப்பை கீழே இறக்கி சூடு சிறிது ஆறியதும், முதல் பாலை விட்டுச் சூடு ஆறும் வரை கரண்டியால் கிளறவும் இளஞ்சூடாக இந்த இனிப்பு தேங்காய் சூப்பை பரிமாறவும்.
0
Leave a Reply