கல்குவாரிகள் மற்றும் கனிம சேமிப்பு கிடங்குகள் ஆகியவற்றில் இருந்து கனிமங்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் வாகனங்களில் 31.07.2025-க்குள் ஜி.பி.எஸ் கருவி கட்டாயம் பொருத்தப்படுவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (30.06.2025) அன்று மதுரை மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்கள் முழுவதும் உள்ள கல்குவாரிகள் மற்றும் கனிம சேமிப்பு கிடங்குகள் ஆகியவற்றில் இருந்து கனிமங்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் வாகனங்களில் 31.07.2025-க்குள் ஜி.பி.எஸ் கருவி கட்டாயம் பொருத்தப்படுவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மதுரை மண்டலம் இணை இயக்குநர் திரு.லோ.சட்டநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
தமிழக சட்டப் பேரவையில் மாண்புமிகு நீர்வளத்துறை மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் அவர்களால் 2021-2022ஆம் வருடம் அறிவிக்கப்பட்ட அறிவிப்பில் கனிமங்கள் கொண்டு செல்லும் அனைத்து வாகனங்களிலும் ஜி.பி.எஸ் கருவி பொருத்தி இயக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இது தொடர்பாக, மதுரை மண்டலத்திற்குட்பட்ட மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி, சிவகங்கை, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, இராமநாதபுரம் ஆகிய 10 மாவட்டங்களில் உள்ள கற்குவாரிகள் மற்றும் கனிம சேமிப்பு கிடங்குகள் ஆகியவற்றில் இருந்து கனிமங்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் வாகனங்களில் 31.07.2025-க்குள் ஜி.பி.எஸ் கருவி கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என மதுரை மண்டலத்திற்குட்பட்ட அனைத்து மாவட்ட கல்குவாரி உரிமையாளர்கள், கனிம சேமிப்பு கிடங்கு உரிமையாளர்கள் மற்றும் லாரி உரிமையாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், மதுரை மண்டலத்திற்குட்பட்ட அனைத்து குவாரிகள், கிரஷர்கள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் கட்டாயமாக எடைமேடை நிறுவப்பட வேண்டும் எனவும் அறிவுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில், உதவி இயக்குநர் (புவியியல் மற்றும் சுரங்கத்துறை) முனைவர்.சி. சுகதாரஹிமா, மதுரை மண்டலத்தில் உள்ள அனைத்து துணை இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்கள், மாவட்ட கல்குவாரி உரிமையாளர்கள், கனிம சேமிப்பு கிடங்கு உரிமையாளர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply