25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


செண்பக மரம் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

செண்பக மரம் .

வீடுகளில் 2 செண்பகமரங்களைவளர்த்தால்சொர்க்கத்தை  காணலாம்எனபுராணகதைகள்கூறுகின்றன.உண்மையில், கண்களைகவரும் மஞ்சள் நிறமும், மனதை மயக்கும் ஒரு வித மணமும் கொண்ட செண் பக பூக்களை விரும்பாதவர்கள் இருக்க முடியாது. தமிழ்நாட்டில் மேற்குத்தொடச்சி மலைக்காடுகளில் இயற்கையாக வளர்ந்து கிடக்கும் ஒரு அழகிய குறுவகை தாவரம் ஆகும்.

தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பா லான சிவ தலங்களில் செண்பக மரம் தலவிருட்சமாக காணப்படுகிறது. பொதுவாக, கோவில்களில் தல விருட்சமாக இருக்கும் மரங்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதிலும், மருத்துவ குணங்கள் நிரம்பிய மரங்களாகவும் இருப்பதற்கு காரணம், முன்னோர்கள் அவற்றின் அபூர்வமான மருத்துவ குணங்களை அறிந்து அவற்றை காக்க வேண்டும். என்று இறைவனுக்கு அருகில் அவற்றை வைத்து பராமரித்தது தான்.

செண்பக மரம் சுற்றுச்சூழலை தூய்மைப்படுத்தும் ஆற்றலை பெற் றுள்ளது. இதன் இலைகள் நீண்டும், இலைகளின் மேற்புறம் பசுமையாக, ரோமங்கள் அடர்ந்து காணப்படு கிறது. இந்த இலைகள் காற்றில் கலந்திருக்கும் தூசி துகள்களை வடிகட்டி தூய காற்றை தருகிறது.

செண்பக மரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவ குணங்கள் நிறைந்ததாக அறியப்படுகிறது. இதன் இலைகளை நிழலில் உலர்த்தி தேநீர் ஆக குடித்து வந்தால் வயிற்று கோளாறுகள் சரியாகும், பசியின் மையை போக்கி பசியைத்தூண்டும். இன்றைய காலத்தில் பெருமளவு காணப்படும் அல்சர் என்னும் வயிற்றுப் புண்களை ஆற்றும். இதன் துவர்ப்பு தன்மை சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உதவும். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News