விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி பயிர்கள் பாதிப்பு .
விவசாய பயிர்களுக்கு நீர் ஆதாரமாக ராஜபாளையம் கண்மாய்கள், மழைக்காலங்களில் ஆற்றில் இருந்து கண்மாய்களுக்கும், கண்மாயிலிருந்து மழைநீர்வடிந்துசெல்லவடிகால், வரத்துகால்வாய்எனபல்வேறுஅமைப்புகள்செயல்படுத்தப்பட்டுவருகிறது.மழைக்காலங்களில் வெளியேறும் தண்ணீர் வாய்க்கால் வழியாக அடுத்தடுத்த பகுதிகளுக்கும் வடி நீராகவும் சென்று வருவது அவசியம்.
பாசன வாய்க்கால் ஆக்கிரமிக்கப்படுவதால் மழை நீர், கண்மாயிலிருந்து வெளியேறும் உபரி பாசன நீர் வெளியேற வழி இல்லாமல் வயல்களில் தேங்கி நிற்கிறது. தேங்கியுள்ள நீரில் பயிர்களின் வேர்கள் அழுகுவதுடன் வளர்ச்சி தடைப்பட்டு பயிர்கள் சேதம் அடைவதுடன் விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.
பாரம்பரியமான நீர்வரத்து வழித்தடங்கள், பாசன வாய்க்கால்கள் குறித்து வருவாய் துறையினரிடம் முறையான கணக்கீட்டை பராமரித்து ஆக்கிரமிப்பு ஏற்படாதவாறு கண்காணித்து இவற்றை சரிசெய்ய வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்
0
Leave a Reply