சத்தீஸ்கரில் வைரம் கண்டுபிடிப்பு!
சத்தீஸ்கர் மாநிலத்தின் மகாசமுந்து மாவட்டத்தில் உள்ள பலோடா–பெல்முண்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், மொத்தம் 1.22 காரட் எடை கொண்ட 5 வைரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இவற்றில் 2 வைரங்கள் உயர்தரத் தரத்தில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு, அப்பகுதியில் வைர வளம் இருக்கக்கூடும் என்பதற்கான முக்கிய ஆரம்ப ஆதாரமாக கருதப்படுகிறது.
இருப்பினும், அங்கு வணிக ரீதியில் வைரச் சுரங்கம் அமைத்து தோண்டுவது குறித்து விரிவான புவியியல் மற்றும் கனிமவள ஆய்வுகள் முடிந்த பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0
Leave a Reply