எலுமிச்சை தோல் கொண்டு இயற்கை கிளீனர் செய்வது.
தேவையான பொருட்கள் -
எலுமிச்சை தோல் 5 முதல் 6 பழங்களின் தோல்
தண்ணீர் தேவையான அளவு
பேக்கிங் சோடா - 1 டீஸ்பூன்
ஷாம்பூ 2 டேபிள்ஸ்பூன்
ஸ்ப்ரே பாட்டில் -1
செய்முறை -
எலுமிச்சை தோல்களை ஒரு பாத்திரத்தில் போட்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.
நன்றாக கொதித்த பிறகு, அந்த தண்ணீரை வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
வேகவைத்த எலுமிச்சை தோல்களை ஆறவைத்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும்.
அரைத்த விழுதை வடிகட்டி வைத்துள்ள எலுமிச்சை தண்ணீருடன் சேர்த்து சுலக்கவும்.
இதில் 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் 2 டேபிள்ஸ்பூன் ஷாம்பூ சேர்த்து நன்றாக கலக்கவும்.
இறுதியாக இந்த கலவைைய மீண்டும் வடிகட்டி ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றினால் இயற்கையான கிளீனர் தயாராகிவிடும்.
பயன்படுத்தக்கூடிய இடங்கள் -
சமையலறை மேசை, கேஸ் அடுப்பு, சிங்க், டைல்ஸ், ஸ்டீல் பொருட்கள்.
குறிப்பு - பயன் படுத்தும் முன் ஸ்பிரே பாட்டிலை லேசாக குலுக்கி பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
0
Leave a Reply