25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் மற்றும் இ-சேவை மையத்தினை  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் மற்றும் இ-சேவை மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் தம்மநாயக்கன்பட்டி புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் மற்றும் இ-சேவை மையத்தினை  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (04.07.2026) ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் பயிர் கடன் விவரங்கள், உரிய தேதியில் திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் வட்டி சலுகைகள், மானியங்கள், விவசாய நகைக் கடன்கள் உள்ளிட்டவை குறித்தும், சங்கத்தின் கணக்குகள், தணிக்கை விவரங்கள், கணிணி மயமாக்கல் பணிகள் குறித்தும் கோப்புகள் மற்றும் பதிவேடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் செயல்பட்டு வரும் இ-சேவை மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு விண்ணப்பங்கள் உரிய காலக் கெடுவுக்குள் பரிசீலிக்கப்படுகிறதா, சான்றிதழ்கள் தாமதமின்றி வழங்கப்படுகிறதா, பொதுமக்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா, கணினி மற்றும் இணைய வசதிகள் முறையாக செயல்படுகிறதா, பணியாளர்களின் சேவை தரம் திருப்திகரமாக உள்ளதா உள்ளிட்டவை  குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

மேலும்,  பொதுமக்கள் சிரமமின்றி அரசு சேவைகளைப் பெற தேவையான நடவடிக்கைகளை எடுக்க அரசு அலுவலர்களுக்கு உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.  இந்த ஆய்வின் போது சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.கனகராஜ், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News