விம்பிள்டன்: பெகுலா, ஜோகோவிச் காலிறுதிக்கு முன்னேற்றம்.
இங்கிலாந்தின் லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, இவா ஜோவிச்சை எதிர்கொண்டார்.
முதல் செட்டை 4-6 என இழந்த பெகுலா, அதன்பின் அபாரமாக மீண்டு 6-3, 6-1 என்ற கணக்கில் அடுத்த இரு செட்களையும் கைப்பற்றி, 4-6, 6-3, 6-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் முன்னேறினார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ரஷ்யாவின் ரோமன் சபியுலினை 7-6, 6-3, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் விம்பிள்டன் ஒற்றையர் பிரிவில் அதிக போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர் என்ற புதிய சாதனையையும் ஜோகோவிச் படைத்தார். இதற்கு முன் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 105 வெற்றிகளுடன் முதலிடத்தில் இருந்த நிலையில், ஜோகோவிச் தனது 106-வது வெற்றியை பதிவு செய்து அந்த சாதனையை முறியடித்தார்.
0
Leave a Reply