25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில், கூட்டுறவுச் சங்கங்களின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தில் வெற்றிபெற்றவர்கள் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக இலவச மாதிரி நேர்காணல்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில், கூட்டுறவுச் சங்கங்களின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தில் வெற்றிபெற்றவர்கள் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக இலவச மாதிரி நேர்காணல்.

விருதுநகர் மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தினால்  உதவியாளர் பதவிகளுக்கான நேரடித் தேர்வு அறிவிக்கை 06.08.2025-இல் வெளியிடப்பட்டது.  இப்பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு 11.10.2025  அன்று நடைபெற்றது.இத்தேர்விற்கான நேர்முகத்தேர்வு 26.11.2025 முதல் நடைபெற இருக்கிறது.  இத்தேர்வில்  வெற்றிபெற்றோர் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக இலவச மாதிரி நேர்காணல் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

  இம்மாதிரி நேர்காணலில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு நேர்காணல் குறித்த விழிப்புணர்வு மற்றும் தேர்ச்சி பெறுவதற்கான நுணுக்கங்கள் குறித்த ஆலோசனைகள் துறை வல்லுநர்களை கொண்டு 24.11.2025 திங்கள் அன்று காலை 10.30 மணியளவில் வழங்கப்பட உள்ளது.

 விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் நடைபெறும் இம்மாதிரி இலவச நேர்காணலினை பயன்படுத்தி கொள்ளலாம்.   இதில் பங்கேற்க விரும்புவோர் studycirclevnr@gmail.com    என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது 93601-71161 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரடியாக வருகைபுரிந்து பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ர,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News