25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


தேர்தல் பறக்கும் படையினரால் கைப்பற்றப்படும் ரொக்கம் மற்றும் பொருட்களைத் திரும்பப் பெற மாவட்ட குறைதீர்க்கும் குழு அமைப்பு  .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தேர்தல் பறக்கும் படையினரால் கைப்பற்றப்படும் ரொக்கம் மற்றும் பொருட்களைத் திரும்பப் பெற மாவட்ட குறைதீர்க்கும் குழு அமைப்பு  .

2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முழுமையாக அமலில் உள்ளன. இதன்படி, உரிய ஆவணங்களின்றி ரூ.50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம்)-க்கு மேல் ரொக்கப் பணமோ அல்லது ரூ.10,000/- (ரூபாய் பத்தாயிரம்)-க்கு மேல் மதிப்புள்ள பொருட்களையோ கொண்டு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு கொண்டு செல்லப்படும் பட்சத்தில், தேர்தல் பறக்கும் படையினர் (Flying Squads) மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினரால் (Static Surveillance Teams) அவை கைப்பற்றப்படுகின்றன.

இவ்வாறு சோதனைகளின் போது கைப்பற்றப்படும் தொகை மற்றும் இதர பொருட்களை உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்துத் திரும்பப் பெறுவதற்காக, "மாவட்ட குறைதீர்க்கும் குழு / கைப்பற்றுகை விடுவிக்கும் குழு" (District Grievance Committee) அமைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தகுந்த ஆதாரங்களைச் சமர்ப்பித்து, இக்குழுவின் தலைவரான திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, விருதுநகர் அவர்களிடம் தங்களது பணம் அல்லது பொருட்களைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகத் தொடர்புகொள்ள வேண்டிய அலுவலர்களின் விவரம் பின்வருமாறு:

திரு.வீ.கேசவதாசன், திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, விருதுநகர்.

கைபேசி எண்: 7373704226

திரு.A.வெங்கடேஷ்வரன்,மாவட்ட கருவூல அலுவலர், விருதுநகர்.

கைபேசி எண்: 9095315660

திருமதி.S. விசாலாட்சி, கணக்கு அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, விருதுநகர்.

கைபேசி எண்: 9677527120

எனவே, பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் பணத்தையோ அல்லது பொருட்களையோ கொண்டு சென்று தேவையற்ற சிரமங்களைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News