மாவட்ட அளவிலான சிறப்பு தடுப்பு பணி பிரிவு மற்றும் மணல் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட அளவிலான சிறப்பு தடுப்பு பணி பிரிவு (District Level Task Force) மற்றும் மணல் ஒருங்கிணைப்புக் குழு (Sand Co-ordination Committee) கூட்டம் மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S ., அவர்கள் தலைமையில் (13.05.2026) நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாவட்டத்தில் சட்டவிரோத மணல் மற்றும் கனிமக் கடத்தலை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் 2026 மாதங்களில் வருவாய்த்துறை, காவல் துறை மற்றும் கனிம வளத்துறை இணைந்து மேற்கொண்ட திடீர் சோதனைகள் மற்றும் வழக்குகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
குறிப்பாக, சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவரங்கள் பரிசீலிக்கப்பட்டன.
மேலும், மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கல் குவாரிகள், கிரானைட் குவாரிகள் மற்றும் செங்கல் சூளைகளின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தங்களது கட்டுப்பாட்டு பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொண்டு, விதிமுறைகள் மீறப்பட்டால் உடனடி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டனர்.
கனிமக் கடத்தலைத் தடுக்கும் வகையில் வருவாய், காவல், சுரங்கத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும், அனைத்து வட்டார அளவிலும் வட்டாட்சியர்களால் பணிக்குழு கூட்டங்களும் முறையாக நடத்தப்பட வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
மேலும், பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறைகளின் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகளுக்காக கனிமங்கள் பயன்படுத்தப்படும் போது, விதிகளின்படி அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், பயன்பாட்டு சான்றிதழ்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆனந்தி, சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான், I A S., உதவி இயக்குநர் (புவியியல் மற்றும் சுரங்கத்துறை) முனைவர்.சி. சுகதாரஹிமா, கோட்டாட்சியர்கள், காவல் துறை, சுரங்கத்துறை மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply