25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


மகிழ்ச்சி நிலைக்க குழித்துறை  மகாலட்சுமி கோயில்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மகிழ்ச்சி நிலைக்க குழித்துறை  மகாலட்சுமி கோயில்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் திருவனந்தபுரம் சாலையில் உள்ள குழித்துறையில் மகாலட்சுமி கோயில் உள்ளது. இங்கு வழிபட்டால் பணம் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும்.

300 ஆண்டுக்கு முன்பு கேரளாவில் இருந்து தேவியர் சிலைகள் குழித்துறை பகுதிக்கு வந்தன. அதில் தாமிரபரணி நதிக்கரையில் உள்ள மகாதேவர் கோயிலுக்கு அருகில் கிழக்கு நோக்கி சாமுண்டிதேவி கோயிலும், சற்று தொலைவில் வடக்கு நோக்கி மகாலட்சுமி கோயிலும் அமைக்கப்பட்டன.

மகாலட்சுமிக்கு தனி கோயில் இருப்பது மிக அபூர்வம். நின்ற நிலையில் உள்ள மகாலட்சுமியின் சிலை 3/4 அடி உயரம் கொண்டது. தாயாரின் கருணையான முகமும், வலது கையில் கொடுவாளும், இடது கையில் பாசக்கயிறும், பின்னிரு கைகளில் சங்கு, சக்கரமும்,தாமரை மீதமர்ந்த கோலமும் தரிசிப்போரின் பாவத்தை போக்கி விடும். கன்னி மூலையில் கணபதி, இடதுபுறம் பூதத்தான் சன்னதிகள், வெளிப்புறம் மடப்பள்ளி, அருகில் பஜனை மடம் உள்ளன.

வெள்ளி அன்று மகாலட்சுமிக்கு பால் பாயாசம் நைவேத்யம் செய்தால் பணப் பிரச்னை வராது. பணப்புழக்கம் அதிகரிக்கும். காஞ்சி மஹாபெரியவர் இங்கு தரிசனம் செய்துள்ளார். பகவதி சேவை (ஐஸ்வர்ய பூஜை) தனலட்சுமி பூஜை, சுயம்வர அர்ச்சனை, லலிதா சகஸ்ரநாமம், சண்டிகா ஹோமம் போன்றவை நடக்கின்றன.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News