பொதுமக்கள் தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளில் மட்டும் கடன் பெருமாறும், அதிக வட்டி வசூலிக்கும் மற்றும் கடன் செயலிகள் மூலம் கடன்களை பெற வேண்டாம்
விருதுநகர் மக்களுக்கு ஒருவிழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை பதிவு. தற்பொழுது நமது மாவட்டத்தில் முறையாக அனுமதி பெறாத பல சிறு நிதி நிறுவனங்கள் இயங்கி வருவதாகவும், அவைகள் பொது மக்களுக்கு அதிக வட்டியில் கடன்களை வழங்கி மக்களை மிகவும் கஷ்ட்டப்படுத்துவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு சமீபகாலமாக நிறைய மனுக்கள் வருகின்றன.எனவே நமது மாவட்டத்தில் இயங்கும் சிறு நிதி நிறுவனங்கள் (மைக்ரோபைனான்ஸ் கம்பெனி (MFI) மாவட்ட நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெற்று இயங்க வேண்டும்.
மேலும், முறையான அனுமதி பெற்ற நிதி நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்ட வட்டி விகிதத்தில் மட்டுமே கடன்கள் வழங்க வேண்டும். அதனை மீறும் நிதி நிறுவனங்களின் மீது கடன் வழங்கும் சட்டத்தின் (Money Lending Act) கீழ் கடுமையான நடவடிக்கை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.மேலும் பொதுமக்கள் தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளில் மட்டும் கடன் பெருமாறும், இவ்வாறு முறையின்றி நடத்தப்படும், அதிக வட்டி வசூலிக்கும் மற்றும் கடன் செயலிகள் மூலம் கடன்களை பெற வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
வங்கிகள் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் கடன் விண்ணப்பங்களை முறையாக பரிசீலினை செய்து உரிய காலத்திற்குள் விண்ணப்பதாரருக்கு முறையான பதிலை தர வேண்டும். இவ்வாறு செயல்படும் நிதி நிறுவனங்கள் மற்றும் செயலிகள் கடன்களை வழங்கிய பின்பு சட்டத்திற்கு புறம்பாக வசூல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. எனவே பொது மக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S ., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply