போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு - 2026 போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் கல்லூரி மாணவர்கள் ஏற்றுக் கொண்டனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், சென்னை மாநிலக் கல்லூரியில் "போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு" மாநிலம் தழுவிய போதைபொருள் எதிர்ப்பு பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்வினை காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.அதன் தொடர்ச்சியாக விருதுநகர் மாவட்டம், விருதுநகர் செந்தில் குமார நாடார் கல்லூரியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் (11.08.2026) மாணவ, மாணவியர்கள் விழிப்புணர்வு உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர்.
அதன்படி, போதைப்பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன். மேலும் எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன். போதைப் பழக்கத்திற்குள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாகத் தருவேன். போதைப்பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்குத் துணை நிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்;விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமார கூறுகின்றேன் என்ற உறுதிமொழியினை அனைவரும் எடுத்துக்கொண்டனர்.
பின்னர், மாவட்டத்தில் 2025-2026 ஆம் ஆண்டு சிறந்த போதைப்பொருள் எதிர்ப்பு குழுக்களாக செயல்பட்டு கல்லூரி அளவில் முதல் மூன்று இடங்கள் பிடித்த விருதுநகர் வே.வெ.வன்னிய பெருமாள் மகளிர் கல்லூரி, சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி மற்றும் சிவகாசி காளீஸ்வரி கல்லூரி,பள்ளி அளவில் முதல் மூன்று இடங்கள் பிடித்த விருதுநகர் சரஸ்வதி அம்மாள் லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தோணுகால் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் இராஜபாளையம் பி.ஏ.சி.எம் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளி, கல்லூரிகளுக்கு ரூ.15 ஆயிரம், ரூ.10 ஆயிரம் மற்றும் ரூ.5 ஆயிரம் பரிசுத்தொகைக்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும்,
பள்ளிகள் அளவில் நாட்டு நலப்பணித் திட்டம் (National Service Scheme) மற்றும் தேசிய மாணவர் படை(NCC) உள்ளடக்கிய சிறந்த தன்னார்வலர்கள் குழுக்களாக செயல்பட்டு, முதலிடம் பிடித்த செம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் இராஜபாளையம் ந.அ.அன்னப்பராஜா நினைவு பள்ளி, இரண்டாமிடம் பிடித்த குல்லூர்சந்தை ஸ்ரீவீரப்பா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மற்றும் சாத்தூர் எஸ்.எச்.என்.எட்வர்டு மேல்நிலைப்பள்ளி, மூன்றாமிடம் பிடித்த மல்லாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் முத்துராமலிங்கபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு தலா ரூ.7,500/-, ரூ.5000/- மற்றும் ரூ.2500/- பரிசுத்தொகைக்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும்,
என ஆக மொத்தம் 9 பள்ளிகள் மற்றும் 3 கல்லூரிகளுக்கு ரூ.90,000/- மதிப்பிலான பரிசுத்தொகைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், காவல் கண்காணிப்பாளர் திரு.கௌதம் கோயல் இ.கா.ப., உதவி ஆணையர்(கலால்) திரு.சு.சோமசுந்தர சீனிவாசன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமதி இல.மீனாட்சி, கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply