25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >>


வரகரிசி உப்புமா (Varagu Arisi Upma)
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வரகரிசி உப்புமா (Varagu Arisi Upma)

தேவையான பொருட்கள்
வரகரிசி - 1 கப்
எண்ணெய் அல்லது நெய் - 3 மேசைக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3 முதல் 4 (கீறியது)
இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிதளவு
தண்ணீர் - 2 முதல் 2.5 கப் (அரிசி மற்றும் வெந்தகத்திற்கு ஏற்ப)
உப்பு - தேவையான அளவு
செய்முறை - 
வரகரிசியை நன்றாகக் கழுவி, ஈரப்பதம் போக நிழலில் உலர்த்திக் கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து, வரகரிசியை சேர்த்து மிதமான தீயில் வாசனை வரும் வரை
லேசாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி சூடானதும், கடுகு, கடலைப்பருப்பு,
உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
அதனுடன் பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து
வதக்கவும்.
நறுக்கிய வெங்காயம் சேர்த்து, அது லேசாக நிறம் மாறும் வரை நன்றாக வதக்க வேண்டும்.
அதன்பிறகு தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும்.
தண்ணீர் கொதித்தவுடன், வறுத்து வைத்துள்ள வரகரிசியைச் சேர்த்து மிதமான தீயில் வைத்துக்
கிளறவும்.
பாத்திரம் மூடி போட்டு, அரிசி நன்கு வெந்து தண்ணீர் விற்கும் வரை மிதமான தீயில் வேக
வைக்கவும்.
சுவையான மற்றும் ஆரோக்கியமான வரகரிசி உப்புமா தயார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News