மதி சிறகுகள் தொழில் மையத்தின் மூலமாக தகவல் தொழில் நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைத் துறை மூலம் இ-சேவை மையம் 01.08.2024 முதல் செயல்பட துவங்கப்பட்டுள்ளது
வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் ஊராட்சிகளில் தொழில் மேம்பாட்டினை வலுப்படுத்தவும், தொழில் முனைவோருக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் வணிக மேம்பாட்டு உதவி சேவைகளை வழங்குவதற்கு மதி சிறகுகள் தொழில் மையம் துவங்கப்பட்டு இயங்கி வருகிறது.மதி சிறகுகள் தொழில் மையம் மூலமாக தொழில் திட்டம் தயாரித்தல், தொழில்நுட்ப விபரங்கள், திறன் பயிற்சி குறித்த விவரங்கள், சந்தை பற்றிய தகவல்கள், நிதி இணைப்புகள், பிறதுறை இணைப்புகள், வணிக இணைப்பு கூட்டம், வழிகாட்டுநர்கள், துறை ரீதியான ஆலோசனைகள் ஆகிய சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது மதி சிறகுகள் தொழில் மையத்தின் மூலமாக தகவல் தொழில் நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைத் துறை மூலம் இ-சேவை மையம் 01.08.2024 முதல் செயல்பட துவங்கியுள்ளது.
இதன் மூலம் மக்களுக்கு தேவையான சேவைகள் அனைத்தும் அரசு நிர்ணயித்துள்ள குறைந்த கட்டணத்தில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் புதிதாக தொழில் தொடங்க ஆர்வமுள்ள தொழில் முனைவோர்களுக்கு தொழில் தொடங்குவதில் ஏற்படும் இடையூறுகளையும், தடைகளையும் கண்டறிந்து அதனை நிவர்த்தி செய்வதற்கான சேவைகளும், அனைத்து துறை ரீதியான கடன் நிதி பெறுவதற்கு தொழில் திட்டம் தயாரித்தல், சட்டபூர்வ ஆவண பதிவுகள் (PAN, GST, MSME, FSSAI…) தொழிலாளர் நல வாரிய அட்டை, வருவாய் நிர்வாகம் சார்ந்த ஆவணங்கள் (அடங்கல், ஜாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ்…,) மற்றும் அனைத்து துறை சார்ந்த ஆவணங்களும் பெற்று தரப்படும்.
மேலும் கடன் பெற்றவர்களுக்கான வணிக இணைப்பு கூட்டம் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது புதன்கிழமை அன்று மதி சிறகுகள் தொழில் மையத்தில் வைத்து நடத்தப்பட்டு வருகிறது. இச்சேவை மையத்தை அனைத்து வட்டாரங்களைச் சார்ந்த நபர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மதி சிறகுகள் தொழில் மையம், முதல் தளம், பூமாலை வணிக வளாகம், பழைய பேருந்து நிலையம் அருகில், விருதுநகர் - 626001. கைபேசி எண்: 95147-37043, 99941-42115. மின்னஞ்சல் முகவரி: vkpwlc.vnr@gmail.com. என்ற முகவரியை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply