25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


பளபளக்கும் கூந்தலுக்கு 'முட்டை ஹேர் மாஸ்க்'
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பளபளக்கும் கூந்தலுக்கு 'முட்டை ஹேர் மாஸ்க்'

கூந்தல் உதிர்வை தடுத்து உறுதியான, பளபளப்பான கூந்தல் பெற உதவும் ஹேர் மாஸ்க் ஒன்றினை முட்டை, ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் கலவையில் தயார் செய்ய

தேவையான பொருட்கள் - முட்டை - 2| தேங்காய் எண்ணெய் -1 ஸ்பூன் | ஆலிவ் எண்ணெய் - 1 ஸ்பூன்

செய்முறை 

முதலில் எடுத்துக்கொண்ட முட்டையை உடைத்து, அதன் வெள்ளை கருவை பிரித்து தனி ஒரு கோப்பைக்கு மாற்றவும்.

பின் இதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கட்டிகள் இல்லா வகையில் நன்கு ஒரு முறை கரைத்துக்கொள்ளவும்.

இறுதியாக இதனுடன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்கு ஒரு முறை கரைத்துக்கொள்ள கூந்தல் ஆரோக்கியம் காக்கும் ஹேர் மாஸ்க் தயார் 

 தயார் செய்த இந்த ஹேர் மாஸ்க்கினை, கூந்தலுக்கு அப்ளை செய்து 30 - 35 நிமிடங்கள் வரை ஊற விடவும். பின், மிதமான ஷேம்பு பயன்படுத்தி தலைக்கு குளித்துவிடவும்.

கூந்தல் ஆரோக்கியம் காக்கும் வைட்டமின்கள் நிறைந்து காணப்படும் முட்டையின் வெள்ளை கரு பயன்படுத்தி தயார் செய்யப்படும் இந்த மாஸ்க், கூந்தல் சேதங்களை தடுக்க உதவுகிறது.

கூந்தல், உச்சந்தலையில் இயற்கை எண்ணெயை தக்க வைக்கும் பண்பு கொண்ட இந்த ஹேர் மாஸ்க், கூந்தல் வறட்சியை போக்கி மிருதுவான கூந்தல் பெற உதவி செய்கிறது!

கூந்தல் வறட்சியை போக்குவதோடு, கூந்தலின் இயற்கை நிறத்தை மீட்டு தரும் தன்மை கொண்ட இந்த ஹேர் மாஸ்க் ஆனது, பளபளக்கும் கூந்தல் பெற உதவி செய்கிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *