25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >>


175 ஆண்டுகளாக ராமாயண ஏடு வாசிக்கும் குடும்பம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

175 ஆண்டுகளாக ராமாயண ஏடு வாசிக்கும் குடும்பம்.

சிவகங்கை மாவட்டம் நெற்குப்பையில் ந.பழ. குடும்பத்தினர் கடந்த 175 ஆண்டுகளாக ராமாயண ஏடு வாசிக்கும் பாரம்பரியத்தை தொடர்ந்து வருகின்றனர்.

சைவம், தமிழை போற்றும் நகரத்தார் சமூகத்தினர், வைணவத்தைப் போற்றும் வகையில் புரட்டாசி மாதத்தில் வீடுகளில் ராமாயண ஏடு வாசிக்கும் வழக்கத்தைக் கடைப்பிடித்து வருகின்றனர். அந்த வகையில் நெற்குப்பை இரணிகோயில் ந.பழ. குடும்பத்தினர் 1850-ம் ஆண்டு முதல் இந்த பாரம்பரியத்தை தொடர்ந்து வருகின்றனர்.

குடும்பத்தைச் சேர்ந்த நல்லகருப்பன் செட்டியாருக்கு ஏற்பட்ட பார்வைக் குறைபாடு நீங்க வேண்டி ராமாயண ஏடு வாசிப்பதாக வேண்டிக்கொண்டதாகவும், பின்னர் பார்வைக் குறைபாடு சரியானதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து பனை ஓலையில் ராமாயணத்தை எழுதி, ஆண்டுதோறும் வாசிக்கும் வழக்கம் தொடங்கியது.

ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி சனிக்கிழமையில் தொடங்கும் ஏடு வாசிப்பு, அடுத்த சனிக்கிழமையில் நிறைவு பெறுகிறது. பழமையான ஓலைச்சுவடியை பாதுகாக்கும் வகையில், 1980-ல் அதன் உள்ளடக்கம் கையெழுத்துப் பிரதியாக மாற்றப்பட்டு, தற்போது அதையே வாசித்து வருகின்றனர்.

ஆறு தலைமுறைகளாக தொடரும் இந்த பாரம்பரியம், ஒவ்வொரு புரட்டாசியிலும் குடும்பத்தினரிடையே மகிழ்ச்சியையும் ஒற்றுமையையும் ஏற்படுத்துவதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News