மாவட்ட அளவிலான வன்கொடுமை தொடர்பான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினராக தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான வன்கொடுமை தொடர்பான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழுவானது 29.03.2023 அன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேற்படி குழுவானது மூன்று வருடத்திற்குள் கலைக்கப்பட வேண்டும். எனவே நடைமுறையில் உள்ள பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் நல்வாழ்வு குறித்த மாவட்ட அளவிலான வன்கொடுமை தொடர்பான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழுவானது தற்போது கலைக்கப்படுகிறது.
புதிய குழுவிற்கான உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இக்குழுவில் மாவட்ட ஆட்சியர் தலைவராகவும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செயல் உறுப்பினராகவும், உறுப்பினர்களாக நாடாளுமன்றம் அல்லது மாநில சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் (பட்டியலினத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும் அல்லது மாநில அரசால் பரிந்துரை செய்யப்படும் விருதுநகர் மாவட்டத்தினைச் சேர்ந்த இரண்டுக்கும் மிகாத நபர்கள்), காவல் கண்காணிப்பாளர், அதிகாரப்பூர்வமான உறுப்பினர் (Gazatted Officers), அதிகாரப்பூர்வமற்ற உறுப்பினர்கள்(ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த சமுக ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்கள்) ஆகியோர் இருப்பார்கள்.
எனவே, தகுதி வாய்ந்த நபர்கள் விருதுநகர் மாவட்ட பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் நல்வாழ்வு குறித்த மாவட்ட அளவிலான வன்கொடுமை தொடர்பான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினராக வருகின்ற 15.07.2026 –க்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply