2050-க்கான குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய முக்கிய பரிசுகள்.
2050-ம் ஆண்டின் உலகை எதிர்கொள்ள, குழந்தைகளுக்கு சொத்துகளை விட வாழ்க்கைத் திறன்களை வழங்குவது முக்கியம் என கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
சிந்திக்கும் திறன் – AI பதில்களை வழங்கலாம்; ஆனால் சரியான கேள்விகளை எழுப்பும் திறன் குழந்தைகளிடம் இருக்க வேண்டும்.
பண மேலாண்மை பழக்கம் – சம்பாதிப்பதை விட சேமித்து வளர்க்கும் திறன் அவசியம்.
நற்குணமும் கருணையும் – அறிவுடன் மனிதநேயமும் இணைந்தால்தான் முழுமையான வளர்ச்சி.
உடல் மற்றும் மன ஆரோக்கியம் – எதிர்காலத்தில் மிகப் பெரிய செல்வமாக இருக்கும்.
குடும்பத்தின் மதிப்பு – உலகம் மாறினாலும் குடும்பம் தரும் பாதுகாப்பும் ஆதரவும் ஈடு இணையற்றவை.
"பொருளாதாரச் செல்வத்தை விட, வாழ்க்கைத் திறன்களே குழந்தைகளுக்கான சிறந்த பரிசு" என்ற கருத்தே இதன் முக்கியச் செய்தியாகும்.
0
Leave a Reply