விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக்கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக்கூட்டரங்கில் (21.06.2024) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் தெரிவித்துக் கொண்டனர். மாவட்ட ஆட்சியர் அவர்கள் விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து உரிய விளக்கம் அளித்து தொடர் நடவடிக்கை எடுக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.கடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளால் வழங்கப்பட்ட மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வேளாண்மை துணை இயக்குநர்/மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவ) அவர்களால் எடுத்துரைக்கப்பட்டது.
மாநில வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் திரு.ஜெயராமன் த/பெ.மூர்த்தி, இராஜபாளையம் பட்டதாரி இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்குதல் இனத்தின்கீழ் ரூ.100000/- ஒரு இலட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தென்னங்கன்றுகள் ஒரு விவசாயிக்கு வழங்கப்பட்டது. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கொடுக்காபுளி கன்றுகள் ஒரு விவசாயிக்கு வழங்கப்பட்டது. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பழ மர கன்றுகள் அடங்கிய தொகுப்பு இரண்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. மானாவாரி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் காய்கறி விதைகள் இரண்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மின்சாரத்தினால் இயங்கும் புல் வெட்டும் கருவி 50 சதவீத மானியத்தில் இரண்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
கண்மாய்கள் மற்றும் ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு அப்பகுதிக்குரிய வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வட்டாட்சியர் இணைந்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சீமைக் கருவேல மரங்களை அரசு ஆணையின்படி அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சீமை கருவேல மரங்களை அகற்றினால் மட்டுமே வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்தினை தடுக்க முடியும் என தெரிவித்தார்.வேளாண்மை பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்படும் இ- வாடகை திட்டத்தின் கீழ் விவசாய கருவிகளான உழுகை இயந்திரம், நெல் அறுவடை இயந்திரம், களைகருவிகள் உள்ளிட்ட அனைத்து இயந்திரங்களும் முன் பதிவு செய்யப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் தங்கு தடையின்றி கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.வன விலங்குகளால் பயிர்சேதம் ஏற்படும் பட்சத்தில் வனத்துறையினர் முன்னுரிமை அடிப்படையில் கள ஆய்வு செய்து இழப்பீடு விவசாயிகளுக்கு உடனடியாக வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
0
Leave a Reply