25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


யானைகள் சேதப்படுத்திய  தென்னை மரங்களுக்கு நிவாரணம் வழங்க  விவசாயிகள் கோரிக்கை .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

யானைகள் சேதப்படுத்திய தென்னை மரங்களுக்கு நிவாரணம் வழங்க  விவசாயிகள் கோரிக்கை .

பலா, மா அறுவடை சீசன் தொடங்கி ,ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதிகளில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் மா, தென்னை, வாழை, பலா ஆகியவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.இந்த பலாப்பழங்களை உண்ண வனப்பகுதியை விட்டு வெளியே யானைகள் கூட்டம்,கூட்டமாக வருகின்றன.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள தம்பாத்து ஊருணி பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து காட்டு யானைகள் கூட்டம், கூட்டமாக  தோப்புக்குள் புகுந்து  25-க்கு மேற்பட்ட தென்னை மரங்களை வேரோடு சாய்த்து ,தென்னை மரங்கள், பலா பழங்கள் ஆகியவற்றை சேதப்படுத்தி விட்டன என அப்பகுதி விவசாயிகள் கூறினர்

இரவுநேரங்களில் காட்டுப்பன்றிகளும் அதிக அளவில் தோட்டத்துக்குள் புகுந்து சேதப்படுத்தி வருகின்றன. எனவே தோட்டத்திற்குள் யானைகள், காட்டுப்பன்றி கள் புகுவதை தடுக்க வனத்துறையினர் நடவ டிக்கை எடுக்க வேண்டும் அதேபோல பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கூறினர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News