நாட்டுக்கோழி இறைச்சி நோய் தீர்க்கும் உணவு .
அளவில் சிறியது நாட்டுக் கோழிகள் .பிராய்லர் கோழிகளை விட நாட்டுக் கோழிகள் அதிக திறன் கொண்டவை. மண்ணில் காணப்படும் தானியங்கள், தாவரங்கள், மூலிகைகள், பூச்சிகள், புழுக்கள் போன்றவற்றை மேய்ந்து வளர்கின்றன. இதனால், இவற்றின் இறைச்சி பல்வேறு சத்துக்கள் நிறைந்ததாக இருக்கிறது.
நாட்டுக்கோழி இறைச்சியில் காணப்படும் புரதம் மனித உடலில் திசுக்களை உரு வாக்குவதற்கும், அவற்றில் கோளாறு இருந்தால் சரிசெய்வதற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், நொதிகள் மற்றும் ஹார்மோன்களை உற்பத்தி செய்யவும் உத வுவதாக கூறுகிறார்கள்.
நாட்டுக்கோழி இறைச்சியில் வைட்டமின் ஏ.பி. பாஸ்பரஸ், கால்சியம், மற்றும் செலினியம் போன்ற தாதுக்கள் உள்ளன. செலினியம் தாது ,கீழ்வாத நோயை தடுப்பதில் சிறப்பானது. பார்வை மங்கல் பாதிப்புகளை வைட்டமின் ஏ சத்து குறைக்கிறது. நாட்டுக்கோழி இறைச்சியில் உள்ள வைட்டமின் டி சத்து ,இதய நோய்களை தடுக்க உதவுகிறது. தோல் நோய்களைத் தடுத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் பி உதவுகிறது.
உலகம் முழுவதும் அந்தந்த இடங்களில் உள்ள நாட்டுக் கோழிகள் ஆர்கானிக் கோழிகள் என்றே அழைக்கப்படுகின்றன. நோய் தீர்க்கும் உணவு களில் ஒன்றாக கருதப்படுகிறது.
0
Leave a Reply