25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >>


2026-27 ஆண்டிற்கான கடன் திட்ட அறிக்கையினை வெளியிட்டு ரூ.37,959.06 கோடி வங்கிக் கடன் வழங்கிட  இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

2026-27 ஆண்டிற்கான கடன் திட்ட அறிக்கையினை வெளியிட்டு ரூ.37,959.06 கோடி வங்கிக் கடன் வழங்கிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது .

விருதுநகர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்(10.08.2026) வங்கிகளுக்கான கடன் திட்ட அறிக்கையினை மாவட்ட ஆட்சித்தலைவர்  மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S.,அவர்கள் வெளியிட்டார்.மாவட்டத்தின் முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் மாவட்ட வங்கிகள் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக விருதுநகர் மாவட்டத்தின் 2026-27 ஆண்டுக்கான கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில், வங்கிகள் மூலமாக ரூ. 37,959.06  கோடி கடன் 2026-27 ஆண்டில் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  

மேலும், மாவட்டத்தின் முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, நபார்ட் வங்கியுடன் இணைந்து இந்த கடன் திட்ட அறிக்கையை வடிவமைத்துள்ளது. மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களை அடிப்படையாக கொண்டு, பல்வேறு துறைகளில் வங்கிகள் கடன் வழங்கிட இத்திட்ட அறிக்கையில் வழி வகைகள் செய்யப்பட்டுள்ளன.

கடன் திட்ட அறிக்கையில் முன்னுரிமை கடன்காளான வேளாண்மைக்கடனாக ரூ.16,648 கோடியும், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனக் கடனாக ரூ.7,850 கோடியும், ஏற்றுமதி தொழில் சார்ந்த கடனாக ரூ.7.0 கோடியும், கல்வி கடனாக ரூ.41.0 கோடியும், வீடுகளுக்கான கடனாக ரூ.319.0 கோடியும், சமூக கட்டமைப்பிற்கான  கடனாக ரூ.4.0 கோடியும், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கடனாக ரூ.5.0 கோடியும் மற்றும் இதர கடனாக ரூ.482.0 கோடியும் என ஆக மொத்தம் ரூ.25,356 கோடியும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிற கடன்களான நகைக்கடன், தனிநபர் கடன், வாகனக் கடன் போன்றவற்றிற்கு ரூ.12,603 கோடியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆக மொத்தம் 2026-27 ஆம் ஆண்டிற்கான வங்கிகள் மூலமாக ரூ.37,959.06 கோடி கடன் வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த 2025-26 ஆம் ஆண்டில் ரூ.32,19 கோடி நிர்ணயிக்பட்டது. அதனை விட இவ்வாண்டு 18.54% கூடுதலாகும். வங்கிகள் பொதுமக்களின் தேவைகளையும், வளர்ச்சியினையும் கருத்தில் கொண்டு கடனுதவி வழங்கிட வேண்டும் என  மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.பாலசுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திருமதி பிர்தௌஸ் பாத்திமா, மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.அமர்நாத், உட்பட  பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News