25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


வனமும், வாழ்வும் பயிற்சி நிறைவுச் சான்றிதழ் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வனமும், வாழ்வும் பயிற்சி நிறைவுச் சான்றிதழ் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு வனத்துறை, திருவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம்(திருவில்லிபுத்தூர் கோட்டம்) சார்பில் வன பாதுகாப்பு, காட்டுத்தீ மேலாண்மை, வனவிலங்கு கணக்கெடுப்பு மற்றும் மனித-விலங்கு மோதல் மேலாண்மை பயிற்சி திட்டத்தின் கீழ் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற வனமும், வாழ்வும் பயிற்சியினை நிறைவு செய்த மாணவர்களுக்கும், மாவட்ட அளவிலான ஆசிரியர் பயிற்சி பட்டறையில் பயிற்சி நிறைவு செய்த ஆசிரியர்களுக்கும் பயிற்சி நிறைவுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (04.03.2026) வழங்கினார்.

மேலும், உலக வன உயிரின நாள்-2026 முன்னிட்டு இயற்கை பாதுகாப்பிற்கு மரக்கன்றுகள் நடுதல், மருத்துவ தாவரங்கள் வளர்ப்பதை ஊக்குவித்தல், வனவிலங்குகளை பாதுகாத்தல், இயற்கை சார்ந்த விழிப்புணர்வு முயற்சிகள் உள்ளிட்ட செயல்பாடுகள் மூலம் வனவிலங்குகள் மற்றும் வாழ்விடப் பாதுகாப்பில் பங்களிப்பை, வழங்கிய 3 நபர்களுக்கு சமூக பாதுகாப்பு தலைமைத்துவ விருதுகள் மற்றும் தலா ரூ.25,000/- பரிசுத்தொகைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.பின்னர், விருதுநகர் மாவட்டம் கோவிலார் அணை சூழல் சுற்றுலா  மையத்தில் ஈர நில தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

 தமிழ்நாடு அரசின் அறிவிப்பின்படி, மாநிலம் முழுவதும் 20,000 அரசு பள்ளி மாணவர்களுக்கு வன பாதுகாப்பு, காட்டுத்தீ மேலாண்மை, வனவிலங்கு கணக்கெடுப்பு மற்றும் மனித-விலங்கு மோதல் மேலாண்மை குறித்த சான்றிதழ் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் 25 அரசு மேல்நிலை/உயர்நிலை பள்ளிகள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற அரசு வழிகாட்டுதலின்படி, விருதுநகர் மாவட்டத்திற்குள் உள்ள 25 அரசு பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டது.மேலும், தேர்வு செய்யப்பட்ட ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் உயிரியல் அல்லது சுற்றுச்சூழல் அறிவியல் தொகுப்புகளை கற்பிக்கும் 25 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு தமிழ்நாடு வனத்துறை வனமும் வாழ்வும், உயர்நிலை வன உயிரின பாதுகாப்பு நிறுவனத்தால் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

அவ்வாறு பயிற்சிகள் வழங்கப்பட்ட ஆசிரியர்கள், ஒவ்வொரு பள்ளியிலும் 11 ஆம் வகுப்பு மாணவர்களில் இருந்து 10 மாணவர்கள், 10 மாணவிகள் என மொத்தம் 20 வீதம் மொத்தம் 500 மாணவர்களை தேர்வு செய்து பயிற்சிகளை வழங்கியுள்ளனர். வன பாதுகாப்பு, காட்டுத்தீ தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பற்றிய விளக்கங்கள், பள்ளிகளில் மாணவர்களுக்கு பயிற்சிகள், வனவிலங்கு கணக்கெடுப்பு அடிப்படை நடைமுறைகள் மற்றும் புது தலைமுறைக்கு வன பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு, மனித-விலங்கு மோதல் தடுப்பு, மேலாண்மை மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து விரிவான விளக்கங்கள் இப்பயிற்சிகள் மூலம் வழங்கப்பட்டன.       

 இந்நிகழ்ச்சியில், பயிற்சி பெற்ற 25 ஆசிரியர்கள் மற்றும் 500 மாணவர்களுக்கு பயிற்சி நிறைவுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், துணை இயக்குநர்(திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்) திரு.ரவி மீனா,இ.வ.ப., மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.அரவிந்தன், திருவில்லிபுத்தூர் உதவி வனப்பாதுகாவலர் திரு.ஞானப்பழம், வனச்சர அலுவலர்(சிவகாசி வன உயிரின சரகம்) திரு.பூவேந்தன், வன சர அலுவலர்கள், அரசு அலுவலர்கள்,  பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News