விருதுநகர் மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் பொருட்டு தொகுதி-IV தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி-IV 12.07.2025 அன்று நடைபெறவிருக்கிறது. இத்தேர்வுக்காக தயாராகிக் கொண்டிருக்கும் விருதுநகர் மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் பொருட்டு தொகுதி-IV தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு 07.05.2025 முதல் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், சூலக்கரையில் நடைபெறவிருக்கிறது.இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு இத்தேர்வுக்கு தேவையான பாடக்குறிப்புகள் இலவசமாக வழங்கப்படும்.
மேலும், இந்த பயிற்சி வகுப்பு மற்றும் தேர்வுகளில் கலந்துகொள்ள விருப்பம் உடையவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரடியாகவோ (அ) 04562-293613 என்ற தொலைபேசி எண் (அ) studycirclevnr@gmail.com என்ற மெயில் வாயிலாக தொடர்புகொள்ளலாம். எனவே TNPSC குரூப் 4 தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply