25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


தோட்டக்கலைப்பயிர் பரப்பு விரிவாக்கம் இனத்தின் கீழ் அரசு மானியமாக பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்வதற்கு இடுபொருள்கள் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தோட்டக்கலைப்பயிர் பரப்பு விரிவாக்கம் இனத்தின் கீழ் அரசு மானியமாக பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்வதற்கு இடுபொருள்கள் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .

விருதுநகர் மாவட்டத்திற்கு, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள்துறை மூலம் 2025-26 ஆம் ஆண்டில் மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.77.175/- இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தோட்டக்கலைப்பயிர் பரப்பு விரிவாக்கம் இனத்தின் கீழ் அரசு மானியமாக பாரம்பரிய காய்கறிகள் சாகுபடிக்கு அரசு மானியமாக ஒரு எக்டருக்கு ரூ.24000/- வீதம் 45 எக்டருக்கு ரூ.10.80/- இலட்சம், மிளகாய்ப்பயிருக்கு ஒரு எக்டருக்கு அரசு மானியமாக ரூ.12000/- வீதம் 100 எக்டருக்கு ரூ.12.00/- இலட்சம், தென்னைப்பயிருக்கு ஒரு எக்டருக்கு அரசு மானியமாக ரூ.12000/- வீதம் 100 எக்டருக்கு ரூ.12.00/- இலட்சம் மற்றும் உதிரி மலர்கள் சாகுபடிக்கு  பயிர்களுக்கு அரசு மானியமாக ஒரு எக்டருக்கு ரூ.12,000/- வீதம் 75 எக்டருக்கு ரூ.9.00/- இலட்சம்  ஆகமொத்தம் தோட்டக்கலைப்பயிர்கள் பரப்பு விரிவாக்கம் இனத்தின் கீழ் ரூ.43.80/- இலட்சம் மானியமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

        வீட்டுத்தோட்டம் அமைப்பதை ஊக்குவித்தல் என்ற இனத்தில் மாடித்தோட்டத்தளைகள் விநியோகம் செய்திட 50 சதவீத மானியத்தில் 300 எண்களுக்கு ரூ.1.35/- இலட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. ஒரு தொகுப்பின் மொத்த விலை ரூ.900/- அதில் 50 சதவீத மானியம் ரூ.450/- மற்றும் பயனாளியின் பங்குத் தொகை ரூ.450/- ஆகும் .தோட்டக்கலைப் பயிர்களில் தேவை அடிப்படையிலான திட்ட இனங்கள் என்ற இனத்தின் கீழ் வேலிக்கருவேல மரங்களை அகற்றி மிளகாய் சாகுபடி செய்திட 50 சதவீத மானியத்தில் ஒரு எக்டருக்கு ரூ.5000/- வீதம் 100 எக்டருக்கு ரூ.5.00/- இலட்சம் மற்றும்  தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களின் தாக்குதலை ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்துவதற்கு  50 சதவீத  மானியத்தில் ஒரு எக்டருக்கு ரூ.1775/- வீதம் 1500 எக்டருக்கு ரூ.26.625 இலட்சத்திற்கு இடுபொருள்கள் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மேற்கண்ட திட்டங்களில் பயன்பெற ஆர்வமுள்ள பயனாளிகள்  https://tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்திலோ, உழவன் செயலியில் பதிவு செய்தோ அல்லது அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகி உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News