க்ரீன் பீஸ் புலாவ்.
தேவையான பொருட்கள்:
2 கப்வெண் புழுங்கலரிசி,11/2 கப்பபட்டாணி,2பெரியசைரஸ் வெங்காயம், சிறு துண்டுபட்டை,
4கிராம்பு,1ஏலக்காய்,1/2 அன்னாசி பூ,2 பிரிஞ்சி இலை,1டீ ஸ்பூன்சோம்பு,
அரைக்க:- 2பமிளகாய்,சிறிய துண்டுஇஞ்சி,6 பல்பூண்டு,2 ஸ்பூன்நெய்,
3 ஸ்பூன்எண்ணெய்,ருசிக்குஉப்பு,3 1/2 கப் தண்ணீர்,
அலங்கரிக்க:- வட்டமாக நறுக்கின வெங்காய துண்டுகள், பட்டாணி
செய்முறை :
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கில்
மெல்லியதாக நறுக்கவும். ப.மிளகாயை கீறிக் கொள்ளவும். மிக்ஸி ஜாரில்,ப.மிளகாய்,இஞ்சி,
பூண்டை, அரைத்துக் கொள்ளவும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்து, கடாயில், எண்ணெய், நெய் விட்டு காய்ந்ததும், பட்டை,
சோம்பு, அன்னாசி பூ, கிராம்பு, பிரிஞ்சி இலை, அரைத்த விழுது, சேர்த்து நன்கு வதக்கவும்.
வதக்கியதும், வெங்காயம், உப்பு சேர்த்து நன்கு கண்ணாடி பதத்திற்கு வதக்கியதும்,
ப.பட்டாணியை சேர்த்துக் கொள்ளவும்.
சாதத்தை, உதிரியாக வடித்ததும், பட்டாணியுடன் சேர்த்து நன்கு சாதம் உடையாமல் கிளறி
இறக்கவும். பிறகு, மேலே 1ஸ்பூன் நெய் விடவும்.
இப்போது, சுவையான, க்ரீன் பீஸ் புலாவ்* தயார். வட்டமாக நறுக்கின வெங்காயம்,
பட்டாணியை அலங்கரிக்கவும்.
0
Leave a Reply