சனீஸ்வரரின் குருநாதர் பைரவர்.
சிவனின் அறுபத்து நான்கு வடிவங்களில் ஒருவர் பைரவர். இவரது வாகனம் நாய். எல்லா சிவன் கோயிலிலும் வட கிழக்கு மூலையில்நின்றகோலத்தில்காட்சியளிப்பார்.பாம்பைபூணுாலாகவும், பிறையைத்தலையில்வைத்தும், சூலாயுதம், பாசக்கயிறு, அங்குசம் ஏந்தியிருக்கும் இவர் பன்னிரன்டு ராசிகள், எட்டு திசைகள், பஞ்ச பூதங்கள். நவக்கிரகங்கள், காலத்தையும் கட்டுப்படுத்தும் சக்தி கொண்டவர். இவரே கிரகங்களில் பலம் மிக்க சனீஸ்வரரின் குருநாதர் ஆவார்.
பிரம்மாவின் மனதில் இருந்து தோன்றியவர் தட்சன். இவரது மகள் தாட்சாயிணி. இவள் சிவனின் மீது காதல் கொண்டாள். தந்தையின் சம்மதம் இல்லாமல் சிவனை கணவராக அடைந்தாள். ஒருமுறை யாகம் ஒன்றை தட்சன் தொடங்கினார். அதற்கு மகள் தாட்சயிணி, மருமகன் சிவனையும் அழைக்கவில்லை. யாகத்தை தடுக்க வேள்வியில் தாட்சாயிணி விழுந்து உயிர் விட்டாள். அவளது உடலைச் சுமந்தபடி இங்கும் அங்கும் சிவபெருமான் அலைந்தார். இதிலிருந்து இவரை விடுவிக்க மகாவிஷ்ணு சக்கராயுதத்தால் தாட்சாயிணியின் உடலைத் தகர்த்தார். உடலில் உள்ள பாகங்கள் ஒவ்வொன்றாக பூமியில் 51 இடங்களில் விழுந்தன. அவையே 51 சக்தி பீடங்களாகி அம்பிகை வழிபாட்டுக்குரிய கோயில்களாகஉள்ளன. அசுர சக்திகளிடம் இருந்து இந்த சக்திபீடங்களை காக்கும் காவலராக இருப்பவர் பைரவரே. .மூர்த்தி, பிரம்மசிரச்சேதர்.உக்ரபைரவர், க்ஷேத்ரபாலகர்,வடுகர், ஆபத்துத்தாரணர், சட்டைநாதர், கஞ்சுகன், கரிமுக்தன், நிர்வாணி, சித்தன், கபாலி, வாதுகன், வயிரவன் என பைரவர் பல பெயர்களால் அழைக்கப்படுகிறார்.
0
Leave a Reply